Monday 25 September 2017

1.10.2017 - International Day of Pensioners - TUI P&R Call!

Trade Union International call!

Hold Hall Meetings / Demonstrations/ Open Rallies / etc to observe the call jointly! 





Dear comrades,

The TUI (P&R) has called to observe 1st October as 'International Day of Fight for Pensioners'. NCCPA National Executive and 2nd AIC of AIPRPA have endorsed the call. The call shows the intensification of attacks in all countries over pension and social security. It also shows the significance of growing unity of pensioners at international level under TUI (P&R). All our State and District/Divisional/Branch Associations to observe the call with other affiliates of NCCPA in their respective centres. As far as Tamilnadu is concerned (see the Tamil circular below) the call given by State COC of Central, State Government and Public Sector Pensioners Associations be observed jointly. All are requested to send report with photos to CHQ in email ID aiprpachq@gmail.com or pensionerspost@gmail.com after holding the programme with hall meetings or open demonstrations or any other programme decided as per local situation - KR GS AIPRPA

(Tamilnadu COC circular for the information of TN State comrades:)

மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு
தமிழ் மாநிலம்
***
1.10.2017 – ஓய்வூதியர் உரிமைகளுக்கான
சர்வதேசப் போராட்ட  நாள்

தோழர்களே!

உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் (WFTU) அங்கமான சர்வதேச தொழிற்சங்கம் (ஓய்வூதியர் & பணிநிறைவானோர்) [TUI (P&R) வரும் அக்டோபர் முதல் நாளை “ஓய்வூதியர் உரிமைகளுக்கான சர்வதேசப் போராட்ட நாளாக” அனுசரிக்குமாறு அறைகூவல் விடுத்துள்ளது.

ஓய்வூதியர்களின் பென்ஷன் மற்றும் சமூகப் பாதுகாப்பு உரிமைகள் உலகம் முழுவதும் எண்ணற்ற நாடுகளில் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. உலகமயம் மற்றும் தாராளமயத்தின் பெயரால் ஏவப்பட்டுள்ள இத்தாக்குதல்களின் பின்னே அரசுகளால் உலகக் கார்ப்பரேட் குழுமங்களின் நலன்கள் உயர்த்திப்பிடிக்கப்படுகின்றன. அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் ஒரு பகுதியினரை கட்டாயமாக NPS திட்டத்தின் பெயரால் அரசு ஓய்வூதியத்திற்கு உரிமையற்றவர்களாக ஆக்குதல்; சமூகப் பாதுகாப்பும் பென்ஷனும் உத்தரவாதப்படுத்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் தலைக்கு மேல் தொங்கும் ஆபத்தான கத்தியாக PFRDA சட்டம் போன்றவை இந்திய நாட்டில் நமக்கெதிராக வந்துள்ள தாக்குதல்கள். உலக அளவில் பல நாடுகளில் இது போன்ற தாக்குதல்களுடன், பென்ஷன் அளவையே பல முறை வெட்டிக் குறைத்தல்; அரசு ஊழியர்கள் பணி நிறைவு பெறும் வயதை அதிகரித்தல் போன்ற தாக்குதல்களும் தொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் உலக அளவில் ஓய்வூதியர்களையும் பணிநிறைவு பெற்றோரையும் திரட்டிப் போராடும் அமைப்பாக TUI (P&R) எனும் அமைப்பை WFTU உருவாக்கியுள்ளது. அந்த அமைப்பின் சார்பில் தான் 1.10.2017 அன்று சர்வதேச போராட்ட நாள் அனுசரிக்குமாறு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாநில மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை  ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் அக்டோபர் 1 – சர்வதேசப் போராட்ட நாளை அனைத்து மாவட்டங்களிலும் சக்தியாக அனுசரிப்பதென்று ஒருங்கிணைப்புக்குழு முடிவெடுத்துள்ளது. அனைத்து ஓய்வூதியர் அமைப்புகளும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொருத்தமான இடத்தில் ஒன்றுபட்ட ஆர்ப்பாட்டங்கள் – சிறப்புக் கூட்டங்கள் போன்ற வடிவத்தில் இந்த சர்வதேச போராட்ட நாளை சிறப்பாக அனுசரிக்குமாறு வேண்டுகிறோம்.

சென்னை தலைநகரைப் பொருத்தமட்டில் அனைத்து மாநில மற்றும் மாவட்ட அமைப்புகளால் போக்குவரத்துத் துறை தலைமையகமான பல்லவன் இல்லத்திற்கு முன்பு 3.10.2017 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஆர்ப்பாட்ட இயக்கம் நடக்கும். அனைத்து அமைப்புகளும் தம் கொடிகள் மற்றும் அமைப்புப் பதாகைகளுடன் கலந்துகொள்வது சிறப்பு.

சர்வதேசப் போராட்ட நாளை வெற்றிகரமாக அனுசரிப்போம்!
ஓய்வூதியர் உரிமைகளைப் பாதுகாக்கக் குரல் கொடுப்போம்!!

அன்புடன்,

N.L.சீதரன்  K.ராகவேந்திரன்
தலைவர்   பொதுச்செயலர்

No comments:

Post a Comment