Thursday 19 December 2013

மாநில மாநாட்டு சார்பாளர்கள் கவனத்திற்கு




AIPRPA தமிழ்மாநில மாநாடு

பாவடி செங்குந்தர் திருமண மண்டபம் - சேலம் - 636001

சேலம் நகரில் 22.12.2013 அன்று நடைபெற இருக்கும் அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் அமைப்பின் தமிழ்மாநில துவக்க மாநாட்டிற்கு வரும் சார்பாளர்கள் கவனத்திற்கு:

  1. மாநாடு நடைபெறும் பாவடி செங்குந்தர் திருமண மண்டபம் சேலம் தலைமை அஞ்சலகத்திற்கு எதிரே உள்ள “சேலம் பழைய பஸ் நிலையத்தில்” இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சின்னக் கடைவீதி அருகே உள்ளது. பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் சின்னக்கடைவீதி கடந்து “பட்டக்கோவில் பஸ் ஸ்டாப்பில்” இறங்கவேண்டும்.
  2. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் சேலம் எக்ஸ்பிரஸ் மூலம் வரும் சார்பாளர்கள் சேலம் டவுன் ரயில் நிலையத்திலேயே இறங்கிவிடவேண்டும். [சேலம் ஜங்ஷன் செல்லக் கூடாது] சேலம் டவுன் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்திற்கு அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் செல்லவேண்டும்.
  3. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்து இறங்கும் சார்பாளர்கள் முதல் ப்ளாட்பாரத்தில் உள்ள சேலம் ஜங்ஷன் ஆர்.எம்.எஸ் அலுவலகத்தில் உள்ள வரவேற்புக்குழு உறுப்பினர்களை அணுகலாம். சேலம் ஜங்ஷனில் இருந்து புதிய பஸ் நிலையம் வழியாக, பழைய பஸ் நிலையத்திற்கு செல்லவேண்டும். பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் செல்லவேண்டும்.
  4. சேலம் நகருக்கு பஸ் மூலம் வரும் சார்பாளர்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து  பழைய பஸ் நிலையத்திற்கு டவுன்பஸ் மூலம் சென்று அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் மாநாட்டு அரங்கம் இருக்கும் பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்திற்கு வரலாம்.
  5. சார்பாளர்கள் தேவையான உதவிக்காக பின்கண்ட தோழர்களை செல்பேசி மூலம் தொடர்பு கொள்ளவும்:

1.   தோழர் கே.ஆர்.கணேசன்: 9488030899

2.   தோழர் நேதாஜி: 9443697287

3.   தோழர் கனகவேல்: 9487255134

4.   தோழர் அர்ச்சுனன்: 9443886464

 

  1. 21.12.2013 அன்று மாலை அல்லது இரவே சேலம் வந்துசேரும் சார்பாளர்கள் அன்று இரவு தங்குவதற்கு பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் ஏற்பாடு உள்ளது. எனவே நேரடியாக மாநாட்டு அரங்கிற்கு சென்று விடலாம்.
  2. 22.12.2013 அன்று இரவு ஊர் திரும்ப முன்பதிவு கிடைக்காமை போன்ற காரணங்களால் அன்று இரவு சேலம் நகரிலேயே தங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ள சார்பாளர்கள் எவரும் இருப்பின் அவர்களும் அன்று இரவு மண்டபத்திலேயே தங்கியிருக்கலாம்.
  3. மாநாட்டிற்கு வரும்போது அனைத்து மாவட்ட அல்லது கோட்ட அமைப்புகளின் செயலர்கள் தங்களுடன் தங்கள் மாவட்ட / கோட்ட அமைப்பின் பானர்களையும் கொடிகளையும் தவறாமல் கொண்டுவந்து மாநாட்டு அரங்கின் வெளியே கட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
  4. தீர்மானங்கள் முன்மொழிய விரும்பும் சார்பாளர்கள் அவற்றை எழுத்துமூலம் கொண்டுவந்து மாநாட்டில் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
  5. மாநாடு காலை எவ்வளவு விரைவாகத் துவங்க இயலுமோ துவக்கப்பட்டு, மாலை கிட்டத்தட்ட 5.00 மணி அளவில் முடிவடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
  6. ஒரு வலுவான மாநில அமைப்பை உருவாக்குவதில் இம்மாநாடு முக்கியப் பங்காற்றும். அகில இந்திய அமைப்பை உருவாக்கும் பணி துவங்கி வேகமாக நடைபெற்றுவரும் இந்நேரத்தில் தமிழ் மாநில அமைப்பை நாம் முதலில் நடத்துவது நாட்டின் இதர மாநிலங்களுக்கு உத்வேகம் அளிக்கும். ஓய்வூதியர் மற்றும் தொழிற்சங்கங்களின் உயர்நிலை அகில இந்திய, மாநிலத் தலைவர்கள் கலந்துகொள்ளும் இம்மாநில மாநாட்டில் பங்கேற்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஓய்வூதியர்கள் திரளாக வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

மாநாட்டு வாழ்த்துக்களுடன்,

தோழமையுள்ள,

கே.ராகவேந்திரன்

மாநில அமைப்பாளர்

9444919295

 


 

No comments:

Post a Comment